Thursday, June 12, 2014

இதெல்லாங்கூட வேண்டாம், 'இந்தக் குழந்தை நன்...னா இருக்கணும்'என்று அவர் நினைத்துவிட்டாலே போதும்;அதுவே உபதேச ''லிங்க்''தான்.

Nama Article 12th June 2014

 

Source: தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி by Sri Sri Chandrasekharendra Saraswati [Maha Periyava] of Kaanchi Kaamakoti Peetam (today is Maha Periyava's Jayanthi)

 

இதெல்லாங்கூட வேண்டாம், 'இந்தக் குழந்தை நன்...னா இருக்கணும்'என்று அவர் நினைத்துவிட்டாலே போதும்;அதுவே உபதேச ''லிங்க்''தான்.

 

பொதுவாக, பெரும்பாலாக, குருவின் அநுக்ரஹ சக்தி சிஷ்யனுக்கு மந்த்ர உபதேசம் என்ற 'லிங்க்'மூலமே பாய்கிறது. வாயால் ப்ரஸங்கம் பண்ணி, எக்ஸ்ப்ளெயின் செய்யாதவராக இருக்கிற மஹாத்மாக்கள் கூட 'மந்த்ரோபதேசம்'என்ற ஒன்றை மாத்திரம் பண்ணிவிடுவதே பெரும்பாலும் நாம் பார்ப்பது. கதைகளில் படிக்கிறோம்;ஒரு மஹானால் தனக்கு உய்வு கிடைக்காதா என்று அவரிடம் போய் அநேக சிஷ்யர்கள் காத்துக் கிடப்பார்கள். அப்புறம் என்றைக்காவது ஒரு நாள் அவர் சிஷ்யனுக்கு ஒரு மந்த்ரம் உபதேசித்து விடுவார். அதிலிருந்து இவனுக்கு ஞானம் பிரகாசமாகத் தொடங்கிவிடும். எப்படியாவது இம்மாதிரி குரு வாயிலிருந்து மந்த்ரோபதேசம் வாங்கிக் கொண்டுவிட வேண்டும் என்பதற்காகத் தபஸ் இருந்து, தந்திரம் பண்ணினவர்கள் கூட உண்டு.

 

கபீர்தாஸுக்கு ராமாநந்தர் என்ற மஹானிடமிருந்து ஸ்ரீராம மந்த்ர உபதேசம் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று ஆசை. இவரோ முஸ்லீம், ஹிந்துவாகப் பிறந்து முஸ்லீம் வீட்டில் முஸ்லீமாகவே வளந்தவர் என்பார்கள். அதனால் தமக்கு ராமாநந்தர் உபதேசம் பண்ணமாட்டாரோ என்று இவருக்குப் பயம். இதனால் ஒரு யுக்தி பண்ணினார். என்ன யுக்தி என்றால், ப்ராம்ம முஹ¨ர்த்த*இருட்டிலே, கங்கையின் படித்துறையிலே, ராமாநந்தர் வருகிற வழியில் போய்ப் படுத்துக் கொண்டு விட்டார். உஷத்கால ஸ்நானத்துக்கு வந்த ராமாநந்தர் கவனிக்காமல் படியிலே கிடந்தவரை மிதித்து விட்டார். இதையே பாத தீ¬க்ஷ என்று கபீர் எடுத்துக் கொண்டார். ('தீ¬க்ஷ'விஷயத்துக்கு அப்புறம் வருகிறேன்) மிதித்தவுடன் அது ஒரு மனுஷ்ய சரீரம் என்று ராமாநந்தருக்குப் புரிந்துவிட்டது. அபசாரமாக ஒன்றைப் பண்ணிவிட்டால் உடனே பிராயச்சித்தமாக ''சிவ சிவ'' என்றோ ''ராம ராம''என்றோ சொல்வதுதானே வழக்கம்?இவர் பேரே ராமாநந்தராயிற்றே!

 

ஒரு ஜீவனைக் காலால் மித்தித்துவிட்டோமே என்று பதறினவர், ''ராம ராம''என்று சத்தம் போட்டுச் சொல்லிவிட்டார். கபீர்தாஸ் அதையே உபதேசமாக எடுத்துக் கொண்டார். தன் நிமித்தமாக அவரை எப்படியாவது ராம நாம தாரக மந்த்ரத்தைச் சொல்ல வைத்துவிட்டால் அதுவே தனக்கு உபதேசம் என்றுதான் இப்படி வேண்டுமென்றே அவர் மிதிக்கும்படியாக வந்து இவர் படியிலே கிடந்தது!

 

எதற்குச் சொன்னேனென்றால் குரு வாய் வார்த்தை சொல்ல வேண்டுமென்றில்லாவிட்டாலும் அநேகமாக இப்படிப்பட்டவருக்குக் கூடச் சிஷ்யரிடம் மந்த்ரோபதேசம் என்ற ஒன்றினால்தான் ஒரு ஜீவ ஸம்பந்தமுண்டாகிறது. இந்த மந்த்ரோபதேசத்தைத்தான் 'வார்த்தை', 'திருவார்த்தை'என்றெல்லாம் சொல்வார்கள். 'ஒரு வார்த்தை'என்றும் பாடல்களில் வரும் - அதாவது வேறே வார்த்தைகள் எதுவும் உபதேசத்துக்கு வேண்டாவிட்டாலும் மந்த்ரம் என்கிற ஒரே ஒரு வார்த்தை மட்டும் வேண்டும் என்று அர்த்தம். ''மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையால் தொடங்கினர்க் (கு) ஓர் வார்த்தை சொலச்சற்குருவும் வாய்க்கும் பராபரமே''என்று தாயுமானவர் இதைத்தான் சொல்கிறார்.

 

ஆகையினாலே மந்த்ரம் உபதேசிக்கிறவர் குரு என்று ஏற்பட்டிருக்கிறது. உள்பெருமை உள்ள ஒரு மஹானை குரு என்பது அவர் வெளியில் ஒரு சிஷ்யனுடன் ஸம்பந்தப்படும் போதுதான். இந்த ஸம்பந்தம் முக்யமாக மந்த்ரோபதேசத்தாலேயே ஏற்படுகிறது. குரு என்பவர் ஒரு ஸமயத்தில் மந்த்ரத்தை உபதேசித்துவிட்டால் போதும். அப்புறம் கூடவே சிஷ்யனை உட்கார்த்தி வைத்துக்கொண்டு, அவனுக்கு விஸ்தாரம் பண்ணி, அவனை அப்யஸிக்கப் பண்ண வேண்டும் என்றில்லை. இப்படி long-term training கொடுப்பதென்பது ஆசார்யனுக்குத்தான் ஏற்பட்ட பொறுப்பு. மஹானான குரு அகஸ்மாத்தாகச் செய்கிறது போலக்கூட ஒரு மந்த்ரத்தைச் சொல்லிவிட்டு, அவர் பாட்டுக்குப் போய்விடுவார். ஆனாலும் அதனாலேயே ஸ¨க்ஷ்மமாக அவருக்கும் சிஷ்யனுக்கும் 'லிங்க்'ஏற்பட்டு, மந்த்ரத்தின் மூலமாக அநுக்ரஹ சக்தி (அநுக்ரஹத்தின் மூலமாக மந்த்ர சக்தி என்றும் சொல்லலாம்) சிஷ்யனுக்குள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

 

ரொம்பவும் உசந்த குருவாயிருந்தால், அல்லது சிஷ்யன் ரொம்ப பக்வியாக (பக்குவமானவனாக) இருந்தால் இந்த மந்த்ர ரூபமான வாயுபதேசம் கூட வேண்டியதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு தினுஸில் 'லிங்க்'இருக்க வேண்டுமென்றேனே, அது இங்கே வேறெப்படி ஏற்படும்?குரு இவனை ஒரு பார்வவை பார்த்து விட்டாலே போதும். அதுவே உபதேசந்தான். அந்தக் கடாக்ஷம் இவனுக்கு உள்ளே போய் வேலை செய்ய ஆரம்பித்துவிடும் அல்லது அவர் இவனைத் தொட்டுவிட்டால் அந்த ஸ்பரிசமே உபதேசமாகிவிடும். இதெல்லாங்கூட வேண்டாம், 'இந்தக் குழந்தை நன்...னா இருக்கணும்'என்று அவர் நினைத்துவிட்டாலே போதும்;அதுவே உபதேச ''லிங்க்''தான்.

 

Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: