Nama Article 6th September 2011
Source: Madhuramurali – Sep 2011
Short story for children
Five persons attended a discourse by a Mahathma, who said that in the present age of Kali Mahamantra kirtan alone is enough for liberation.
These five persons wanted to do Mahamantra kirtan and thought over to identify a place to do the same.
- One person decided to buy a land for doing Mahamantra kirtan.
- Second person decided to a build a building there
- Third person decided to take care of expenses to provide water facilities
- Fouth person dedicated statues of Radha Krishna deities
- Fifth person came forward to provide food to all those who come and Chant there.
All these were done as planned but none of the five persons sat there to do Mahamantra kirtan. They also lamented that no one came forward to do Mahamantra kirtan even after all these facilities were made by them.
Namakirtan is definitely the easiest way. But our illusion (maya) would not allow us to do even that. Hence we should not get caught in the illusion. One should always catch hold of the Divine Name with out indulging in any pomp and show.
Source: Madhuramurali – Sep 2011
ஐந்து நபர்கள் சேர்ந்து பிரவசனம் கேட்க போனார்கள். அன்று பிரவசனம் செய்த மஹான் இந்த கலியில் மஹாமந்திர கீர்த்தனம் ஒன்றே போதும். இதை இடைவிடாமல் கீர்த்தனம் செய்து வந்தாலே இந்த சாரமற்ற ஸம்ஸாரத்தை தாண்டிவிடலாம் என்று கூறியதை கேட்டார்கள்.
இந்த ஐந்து நபர்களும் பிரவசனம் முடிந்து திரும்பும் பொழுது, அவர் கூறியபடியே எப்பொழுதும் மஹாமந்திர கீர்த்தனம் செய்ய ஆசைப்பட்டார்கள். சரி நாம் மஹாமந்திர கீர்த்தனம் செய்வதற்கு இடம் வேண்டுமே? என்ன செய்வது என்று ஒருவர் தெரிவிக்கையில், ஐவரில் ஒருவர் சொன்னார் அதற்கான இடத்தை நான் வாங்கி கொடுத்து விடுகின்றேன் என்று. இரண்டாமவர் சொன்னார் அவர் இடம் வாங்கி தருவதாக இருந்தால் நான் என்னுடைய செலவில் கட்டிடம் கட்டி தந்து விடுகின்றேன் என்றார். மூன்றாமவர் நான் ஒரு போர் போட்டு கொடுத்து தண்ணீர் தடையில்லாமல் கிடைக்கும்படி செய்து விடுகின்றேன் என்றார். நான்காம் நபரோ அப்படி கீர்த்தனம் நடக்கும் இடத்தில் ஒரு ராதா க்ருஷ்ண மூர்த்தி இருந்தால் அழகாக இருக்கும் அதை நான் செய்து விடுகின்றேன் என்றார். ஐந்தாமவர் அப்படி நாம கீர்த்தனம் செய்பவர்களின் உணவுக்கு நான் ஏற்பாடு செய்து விடுகின்றேன் என்றார். இவர்கள் சொன்னபடியே எல்லாம் செய்தாகிவிட்டது. ஆனால் அந்த ஐவரில் ஒருவர் கூட நாம கீர்த்தனம் செய்ய உட்காரவில்லை. அதோடு மட்டும் அல்லாமல் நாங்கள் இவ்வளவு வசதி செய்து தந்தாலும் கூட நாமகீர்த்தனம் செய்வதற்கு யாரும் வருவதில்லை என்று குறைபட்டு கொண்டு, எல்லோரிடமும் சொல்லி கொண்டிருந்தார்கள்.
நாம கீர்த்தனம் ஸுலபமான வழி ஆனால் உன்னுடைய மாயை அதைக்கூட செய்யவிடாது. குழந்தைகளே மாயைக்கு வசப்படாமல் வேறு எதிலும் ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் கீர்த்தனம் ஒன்றையே பற்றி இருங்கள்.
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
Simplest of the simple, Rarest of the rare, Sweetest of the sweet!
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment