Sunday, July 6, 2014

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) - வார வழிபாடு (Weekly worship)

Nama Article 6th July 2014

 

Source: Deivathin Kural - Sri Sri Chandrasekharendra Saraswati [Maha Periyava] of Kaanchi Kaamakoti Peetam

 

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) - வார வழிபாடு (Weekly worship)

 

''வாரத்தில் ஒரு நாள் கூட்டு வழிபாடு, வாரத்தில் ஒரு நாள் பொதுப்பணி என்றால் எப்படி முடியும்?ஒரு நாள் தானே 'லீவ்'இருக்கிறது?''என்று கேட்பீர்கள். அந்த ஒரு நாளிலேயேதான் இரண்டையும் சேர்த்துச் செய்யச் சொல்கிறேன். தெய்வப்பணி, ஸமூஹப்பணி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்ய வேண்டும்.

 

முதலில் கோவில் வாசலில் எல்லா ஜனங்களும் சேர்ந்து வழிபட்டு, அத்தனை பேரும் அந்த ஒரே பராசக்தியின் குழந்தைகளாகச் சேர்ந்து பகவந் நாமத்துடனயே கோவிலைப் பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு போய்க் குளம் வெட்டுவதையோ, ரோடு போடுவதையோ, நந்தவனம் வளர்ப்பதையோ செய்ய வேண்டும்.

 

வேலையெல்லாம் முடிந்த பின்னும் கோவிலுக்கே திரும்பிவந்து, ''உன் க்ருபையால் இன்றைக்கு கொஞ்சம் பாபத்தைக் கழுவிக் கொள்ள முடிந்தது; சரீரம் எடுத்ததற்குப் பயனாக ஓர் உபகாரம் பண்ண முடிந்தது'' என்று நமஸ்காரம் செய்ய வேண்டும். கொஞ்சம் பஜனை - ஒரு பத்து நிமிஷம் இருந்தால் கூடப் போதும் - கொஞ்சம் உபந்யாஸம் நடத்தி விட்டு எல்லாரும் கலைய வேண்டும். அறுபத்திமூவர் அல்லது ஆழ்வாராதிகள் அல்லது பக்த விஜயத்தில் வரும் மஹான்கள் இவர்களைப் பற்றிய உபந்யாஸமாக இருந்தால், நம் மாதிரி மனிதர்களாக இருந்தவர்களே எப்படியெல்லாம் த்யாகத்தாலும், ப்ரேமையாலும் தெய்வமாக உயர்ந்திருக்கிறார்கள் என்று மனஸில் ஆழப் பதியும்.

 

On a weekly holiday we should do collective worship and social work together.

 

First all should assemble at the temple entrance and do collective worship with a feeling that all are the children of the Supreme lord and circumambulate the temple by Chanting the Divine Names of the Lord. Then once can clean the temple pool, clean the road or do work in the temple garden.

 

After completing the chores one should return to the temple and pray to the Lord by telling "By your grace we could wash away some of our sins, we could do something worthwhile while being blessed with this human body" and prostrate the Lord. Then all can do a little prayer - even though if it is for ten minutes followed by a small discourse and all can disperse. If we can do a discourse on Nayanmars, Azhwars or Bhakhas in Bhaktha vijayam then we can appreciate that those who were born as Humans have become noble and grown to the status of Lord by their quality of sacrifice and love for Lord 

 

Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji

 

 

 

Performance of Nama kirtan during auspicious days will destroy these ten sinful errors

 

Every Ekadasi Akanda Namakirtan (Chanting Mahamantra from 6 am to 6 pm is done in most of our Namadwaars)

 

 

 

On auspicious days like Ekadasi people go on the streets singing the Divine Name of the Lord.

 

Every day in Marghazhi month and on Sundays people go on the streets singing the Divine Name of the Lord in all Namadwaars and GOD Satsangs

 

 

 

Every Saturday and on every Ekadasi people would get together in this Bhajan mutt/hall and do Bhajan [Nama Sankirtan], i.e. sing the Divine Names of the Lord.

 

Every week people in hundres of GOD satsangs across the globe join and sing the Divine Names of the Lord

 

 

Namadwaars and GOD satsangs across the globe periodically do Annadhanam (serve free food) / give free dresses and do special prayers to people in Old age homes, orphanages, home for mentally / physically challenged care centers, juvenile detention centers and home for destitute women

 

Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: