Nama Article 1st Nov 2016
Sri Sri Muralidhara Swamiji's Kirtan
ராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
பாவங்களை மன்னித்தருள்வாய்
என் தந்தையே வந்தனம் உந்தனுக்கு
அன்று முதல் இன்று வரை நான் செய்த
(பாவங்களை ...)
சந்த்ரபாகா நதிக்கரையில் கோவில் கொண்டவனே
பண்டரிநாதனே பாண்டுரங்கனே
(பாவங்களை ...)
பாதம் இரண்டையும் ஆற தழுவிக் கொண்டேன்
தாமரை கைகளை தலையில் வைத்தருள்வாய்
பாவங்கள் இனி ஏதும் நான் செய்யாமல்
பக்கம் இருந்தெனை காத்தருள்வாய்
(பாவங்களை ...)
உனை விட்டால் எனக்கு கதி வேறில்லை - இதை
நினைவில் கொண்டு அருள் செய்திடுவாயே
தனிமையில் அமர்ந்துனை பாடுவதையே - என்
பணியாக என்றும் பணித்திடுவாயே (பாவங்களை...)
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment