Kamba
Ramayanam
மும்மை சால் உலகுக்கு
எல்லாம்
மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு
நல்கும் தனிப்
பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை
நோய்க்கும்
மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான்.
மும்மை சால் உலகுக்கு எல்லாம் - மூன்று என்னும் தொகை பொருந்திய (வானம், பூமி, பாதாளம்)
என்னும் உலகங்கள் யாவற்றிற்கும்;
மூல மந்திரத்தை - ஆதாரமாய்ப் பொருந்திய மந்திரத்தை;
முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் - முழுவதுமாகத் தம்மையை வழிபடும் அடியார்கட்கு அளிக்கும்;
தனிப்பெரும் பதத்தை - ஒப்பற்ற சிறப்பு மிக்க சொல்லை;
தானே - தான்
தனித்தே;
இம்மையே - இந்தப்
பிறவியிலேயே;
எழுமை நோய்க்கும் மருந்தினை - எழுவகைப் பிறப்புக்களாகிய நோய் வராமல் தடுக்கும் மருந்தை;
'இராமன்' என்னும் - இராமன் என்கின்ற;
செம்மை சேர் நாமம் தன்னை - சிறப்புப் பொருந்திய திருநாமத்தை; கண்களின் தெரியக் கண்டான்
- தன் கண்களினால் (அவ்வம்பில்) தெளிவாகப் பார்த்தான்.
No comments:
Post a Comment