Tuesday, April 23, 2024

Daily prayer at Gnanananda Thapovanam - Hari Namam

 Daily prayer at Gnanananda Thapovanam

ஹரி நாமம்

ஆதிஅயனொடு தேவர் முறையிட ஆசிதருவது ஹரிநாமம்

ஆவிபிரிவுறும் வேளை விரைவினில் ஆளவருவது ஹரிநாமம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஓதும் அடியவர் நாவில் அமுதென ஊறிநிறைவது ஹரிநாமம்

ஓலமிடு கஜராஜன் விடுபட ஓடி அருள்வது ஹரிநாமம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

வேதமுடியிலும் வேள்வி முடிவிலும் மேவிஉறைவது ஹரிநாமம்

வீசும் அலைகடல் சேஷன்நிழல்செய நீடுதுயில்வது ஹரிநாமம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

நாத ஜய ஜகந்நாத நாமவென நாளும் அவனடி பணிவோமே

நாம பஜனையில் நாமமஹிமையால் நாதனவனருள் பெறுவோமே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

பூதகண பரிவாரபரசிவ பூஜைபெறுவது ஹரிநாமம்

பூமிபுவனமும் ஏகபதமளவாக வளர்வது ஹரிநாமம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

தாதைதொடுமிட மேதுமவனுளன் தேவன் எனும் மகனுரைபோலே

தாக நரம்ருக கோர வடிவோடு தூணிலெழுவது ஹரிநாமம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

காதலொடு கவி பாடுமடியவர் காண வருவது ஹநோமம்

காலநிலை கருதாது துதிசெயத் தாவி வருவது ஹரிநாமம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஏதுவிலகினும் ஏதுதொடரினும் ஈசனவனருள் நினைவொன்றே

ஏறியநுபவமீறி அனைவரும் ஏக பஜனையில் மகிழ்வோமே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

https://namadwaar.org/

No comments: