Nama Article 3rd January 2016
Sri Sri Muralidhara Swamiji's Kirtan
ராகம்: தன்யாசி தாளம்: ஆதி
பகவன் நாம சித்தாந்தம் செய்த
போதேந்திர குருவிற்கு நமோ நமோ (பகவன் ..)
முக்தி தரும் காஞ்சியில் அவதரித்த
மோஹன மூர்த்திக்கு நமோ நமோ (பகவன் ..)
சுகுணா தேவி சுந்தர புதல்வன்
இந்திர சரஸ்வதிக்கு நமோ நமோ (பகவன் ..)
ஆத்ம போதேந்திரரின் ஆப்த சிஷ்யராம்
ஆனந்த மூர்த்திக்கு நமோ நமோ (பகவன் ..)
ஞான சாகரனின் ஆத்ம சகா
ஞான வசிஷ்டருக்கு நமோ நமோ (பகவன் ..)
காஷாய தண்ட கமண்டலம் தரித்த
சுந்தரமூர்த்திக்கு நமோ நமோ (பகவன் ..)
காமகோடி பீடத்தின் காருண்ய மூர்த்தியாம்
ஜகத்குருவிற்கு நமோ நமோ (பகவன் ..)
தாரக நாமமே கதியென்று சொன்ன
ஆராதன ஸுலபருக்கு நமோ நமோ (பகவன் ..)
காசி நகரில் கங்கை கரையில்
துறவறம் பூண்டவர்க்கு நமோ நமோ (பகவன் ..)
சிவ நாம பிரியராம் ஸ்ரீதரர்
சேவித்த குருவிற்கு நமோ நமோ (பகவன் ..)
சம்பிரதாயம் ஸ்தாபிக்க வேங்கடராமரை
ப்ரேரணை செய்தவர்க்கு நமோ நமோ (பகவன் ..)
ஊமை குழந்தைக்கும் ஞானத்தை அருளிய
உன்னத குருவிற்கு நமோ நமோ (பகவன் ..)
பதிதனுக்கும் கதி ஒன்றுண்டென
விதி செய்த குருவிற்கு நமோ நமோ (பகவன் ..)
ஊரூராய் சென்று பாகவதம் சொன்ன
கருணாமூர்த்திக்கு நமோ நமோ (பகவன் ..)
காவேரி கரையில் கோவிந்தபுரத்தில்
வீற்றிருக்கும் குருவிற்கு நமோ நமோ (பகவன் ..)
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare