Sunday, August 9, 2015

அமர்ந்தாலும் எழுந்தாலும் நின்றாலும் நடந்தாலும் பசித்தாலும் புசித்தாலும் அவன் பெயரையே சொல்லிடுவோம்

Nama Article 8th August 2015


Source:

HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji's Kirtan

கோவிந்தனுக்காட்பட்ட குடும்பமம்மா எங்கள் குடும்பம்

இல்லறத்தில் இருந்திடுவோம் நல்லறங்கள் செய்திடுவோம்
எல்லாம் அவன் இஷ்டம் என்று எண்ணி அல்லல் பட மாட்டோம் (கோ)

பாகவத கதை கேட்டிடுவோம் , ராக தாளத்துடன் பாடிடுவோம்
சோக மோக படமாட்டோம், நாகரீகமாய் பழகிடுவோம் (கோ)

கூடி கூடி பேசிடுவோம், ஆடிபாடி களித்திடுவோம்
அடியார்களை தேடி தேடி, ஓடி ஓடி பணிந்திடுவோம் (கோ)

பிள்ளை குட்டியுடன் வாழ்ந்திடுவோம், நல்லறங்கள் சொல்லி வளர்த்திடுவோம்
கள்ளமில்லா பாகவத, தர்மத்திலே பழக்கிடுவோம் (கோ)

பேராசை பட மாட்டோம், பாசத்திலே விழ மாட்டோம்
நேசத்துடன் தாமரை இலை தண்ணிரை போல் வாழ்ந்திடுவோம் (கோ)

கவலைப்பட மாட்டோம் காலனுக்கு அஞ்ச மாட்டோம்
புண்ணியம் பாவம் காலம் என்று பரிதவிக்கவும் மாட்டோம் (கோ)

அமர்ந்தாலும் எழுந்தாலும் நின்றாலும் நடந்தாலும்
பசித்தாலும் புசித்தாலும் அவன் பெயரையே சொல்லிடுவோம் (கோ)

மனிதனால் நிறைந்துள்ளோம் குணத்தால் உயர்துள்ளோம்
அமைதியுடன் என்றும் வள்ளல் போல் வாழ்ந்திடுவோம் (கோ)

சோம்பி திரியவும் மாட்டோம் வம்பு பேசவும் மாட்டோம்
நம்பி அவன் சரணத்தை நாமம் சொல்லி வாழ்ந்திடுவோம் (கோ)


Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji

If you keep chanting Bhagavan Năma, She ('Prithvi') will not consider you a burden. 'Nirbhayo nirbaro'. The world should not be a burden to you and you should not be a burden to anyone.


How then can one fear to walk on this path? We can, therefore, move fearlessly ('nirbhayanăi') on this path.


निर्भयो निर्भरो भूत्वा गोविन्दं शरणं गतः यः स्मरेत्तस्य नामानि हि भागवतोत्तमः


एवं तौ भ्रातरौ भक्तौ दृढवैराग्यसम्युतौ ऊषतुर्यमुनातीरे कृष्णकीर्तनतत्परौ


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: