Monday, March 30, 2015

ப்ராணாவஸ்தையில் இருக்கிறவர்களிடம் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு 'சிவ சிவ சிவ சிவ'என்றோ 'ராம ராம ராம ராம'என்றோ உரக்கச் சொல்ல வேண்டும். உரக்கச் சொல்லவேண்டியது அவசியம்.

Nama Article 30th March  2015


Source: Deivathin Kural - Sri Sri Chandrasekharendra Saraswati [Maha Periyava] of Kaanchi Kaamakoti Peetam

ப்ராணாவஸ்தையில் இருக்கிறவர்களிடம் கோயில் ப்ரஸாதத்துடன் போகவேண்டும். அவர்களுக்கு கங்கா தீர்த்தம் கொடுக்க வேண்டும். விபூதி இடவேண்டும். துளஸியை வாயில் போடவேண்டும். அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு 'சிவ சிவ சிவ சிவ'என்றோ 'ராம ராம ராம ராம'என்றோ உரக்கச் சொல்ல வேண்டும். உரக்கச் சொல்லவேண்டியது அவசியம். ஜீவன் காதிலே அதுபட்டு மனஸைத் திருப்ப வேண்டுமாதலால், உயிர்போகும் வரையில் இப்படி நாம ஜபம் செய்வதுதான் ச்ரேஷ்டம். ஆனால் ப்ராணாவஸ்தையிலேயே ஒரு ஜீவன் மணிக்கணகாகக இழுத்துக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது?நமக்கு மற்றக் கார்யம் இருக்கத்தானே செய்யும்?அதனால் பக்கத்திலே பந்துக்களில் யாராவது ஒருத்தர் முறைபோட்டுக்கொண்டு உட்கார்ந்து நாம ஜபம் பண்ணும்படியாக ஏற்பாடு செய்துவிட்டு நாம், 'நம் கடமையைக் கொஞ்சமாவது செய்தோம்'என்று புறப்பட வேண்டும். குறைந்த பக்ஷம் சிவநாமாவோ, ராமநாமவோ 1008 தடவையவது நாம் ஒரு ஜீவனுக்காகச் சொல்லவேண்டும். இப்படிப் பலபேர் சொன்னது அந்த ஜீவனுக்குள்ளே போய் தானாக அது உள்நினைவில் பகவானை நினைத்துக்கொண்டிருக்கும் படியாகப் பண்ணியிருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது இரண்டாம் பக்ஷந்தான். நாம் கடைசிவரை இருக்கமுடியாமல் வந்துவிட்டாலும்கூட, ஒரு ஜீவன் பிரிகிறபோது அங்கு பகவந்நாம சப்தம் இருக்கும்படியாக அவனுடைய பந்துக்களையாவது ஜபிக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு வருவதே ச்லாக்யம்.


Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji


The best way to help a person attain salvation on his death bed is to Chant the Mahamantra loudly in his ears.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: