Monday, December 7, 2015

அன்று நீ விபவம், ஆனால் என்றும் உன் நாமம் அபயம். நாமம் சொல்கின்றோம்; இல்லை; நாமம் சொல்லி கதறுகின்றோம். கதியில்லை, மதிகெட்ட எங்களுக்கு ஒரு விதி செய்து அருளினால் எங்கள் மருள் போகும்.

Nama Article 7th December 2015

Source: http://www.namadwaar.org/articles/AnEarnestPrayer.html

Chennai has been submerged in the floods owing to the incessant rains that poured in the last few days. Here is an earnest prayer unto the Almighty, our Protector and Savior...


HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji

அன்று தேவர்கோன் கர்வத்தை அடக்க வேள்வியை நிறுத்தியதால் ஏமாற்றம் அடைந்ததோடு அல்லாமல் தன் நிலை தடுமாறியதால் வெகுளியால் கோகுலத்தை அழித்தான். தட்டு தடுமாறிய கோகுலவாஸிகளும் ஆவினமும் அரணமாய் நின் திருவடியில் தஞ்சம் புகுந்தனர். நொடியும் தாமதியாமல் குன்றெடுத்து கோகுலம் காத்தாய். இன்று யார் கர்வத்தை அடக்க இந்த லீலையை செய்கின்றாய்?

எங்களிடம்தான் கர்வம் தலைதூக்கியுள்ளது என்பதில் எனக்கு ஐயம் இல்லை, நியாயமே ஆகும். என்ன கர்வம் என்று என் வாயால் சொல்லத்தான் வேண்டும். சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் உனக்கில்லை என்ற போதிலும் அறிவால் ஆகாதது இல்லை என்ற புல்லறிவால் இறுமாந்திருந்தேன்; பட்டதுயரத்தால் நல்லறிவு வந்தது.

அன்று நீ விபவம், ஆனால் என்றும் உன் நாமம் அபயம். நாமம் சொல்கின்றோம்; இல்லை; நாமம் சொல்லி கதறுகின்றோம். கதியில்லை, மதிகெட்ட எங்களுக்கு ஒரு விதி செய்து அருளினால் எங்கள் மருள் போகும்.


பார்த்தன் ஜயத்ரதன் விஷயமாக செய்த சபதத்தை நிறைவேற்ற சக்ராயுதத்தால் இருளை விலக்கி ஆதித்யனை காண்பித்தாய். அதுபோல் ஆதித்யனை நிரந்தரமாக ஆகாயத்தில் நிறுத்தி மேகங்களை இப்போது விரட்டிவிடு. தேவையானபோது தானே வரட்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமாம், விருந்தும் கசக்கும், உறவும் பிணக்கி கொள்ளுமாம். தேவையான காலம் அளவோடு பூமியில் தங்கி எங்களுக்கு அருள்பாலிக்கட்டும். நாங்களும் வரவேற்கின்றோம், மகிழ்கின்றோம், உறவாடுகின்றோம், பயனடைவோம்.


அன்று ராமாவதாரத்தில் ராவணனை பார்த்து இன்று போய் நாளை வா என்றாய். இப்போழுது வருணனை பார்த்து, "இன்றே போய் அப்புறமாக வா" என்று ஆணையிடு. வீடு இழந்தார்கள், உடமைகளை இழந்தார்கள், உறவினர்களை இழந்தார்கள், அஞ்சி கதிகலங்கி நிற்கின்றார்கள். எங்கும் அச்சம், ஏன் என்றால் மிச்சம் ஒன்றும் இல்லை.


அபயம் கொடு; ஆறுதல் கொடு; மனதில் உறுதி கொடு; நிதி கொடு; நல்லறிவு கொடு; விதிக்கும் விதி செய்யும் வித்தகனே உன் கழல்கள் போற்றி.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: