Sunday, December 27, 2015

நாமகீர்தனத்திற்கு ஏங்கி வந்தாயோ, பீமா நதிக்கரைத் தேடி வந்தாயோ

Nama Article 27th December 2015


Sri Sri Muralidhara Swamiji's Kirtan


ராகம் – செஞ்சுருட்டி


நிஜ வைகுண்டத்தை விட்டு பூ வைகுண்டம் வந்த

காரணமென்னவோ விட்டலா


பக்தர்கள் எங்களுக்கோ வைகுண்டம் வர ஆசை

பகவான் உனக்கோ பூமிக்கு வர ஆசை


நாமகீர்தனத்திற்கு ஏங்கி வந்தாயோ

பீமா நதிக்கரைத் தேடி வந்தாயோ

ராமாவையும் கூட நீ அழைத்து வந்தாயோ

உமாபதி அம்சமாய் தோன்றி நின்றாயோ


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

--------------------------------------------------------

http://namadwaar.org/home.php

--------------------------------------------------------

For more Namakirtan articles please visit http://guruandnamakirtan.blogspot.com/



Monday, December 14, 2015

Yet you behave as a friend of the soul of those who worship you by Chanting your Divine Names

Nama Article 14th December 2015


Srimad Bhagavatham 12:8:40


किं वर्णये तव विभो यद्-उदीरितोऽसुः

संस्पन्दते तम् अनु वाङ्-मन-इन्द्रियाणि

स्पन्दन्ति वै तनु-भृताम् अज-शर्वयोश् च

स्वस्याप्य् अथापि भजताम् असि भाव-बन्धुः


Markandeya says, O Lord! How can I extol you? For, propelled by You (alone) function the vital air and following it the speech, mind, and Indriyas (the sense of perception and the organs of actions) not only for embodied beings but even for Brahma and Lord Siva.

Yet you behave as a friend of the soul of those who worship you by Chanting your Divine Names.


Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji


All that I know is simply to call out Your Divine Names and shed tears


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


Sunday, December 13, 2015

ராம ராம என்று சொன்னால் காமம் போகுமே கோபால் கோபால் என்று சொன்னால் கோபம் போகுமே

Nama Article 13th December 2015


Sri Sri Muralidhara Swamiji's Kirtan


ஸிந்துபைரவி

ராம ராம என்று சொன்னால் காமம் போகுமே

கோபால் கோபால் என்று சொன்னால் கோபம் போகுமே


நாரணன் நாரணன் என்று சொன்னால் நாவினிக்குமே

கோவிந்த கோவிந்த என்று சொன்னால் பந்தம் போகுமே


முகுந்த முகுந்த என்று சொன்னால் முக்தி நல்குமே

மாதவ மாதவ என்று சொன்னால் மாதவமாகுமே


கேஸவ கேஸவ என்று சொன்னால் ஆசை போகுமே

வாமன வாமன என்று சொன்னால் பொறாமை போகுமே


ஸ்ரீதர ஸ்ரீதர என்று சொன்னால் சீரும் பெருகுமே

மதுஸூதன மதுஸூதன என்று சொன்னால் போதை நல்குமே


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


Saturday, December 12, 2015

He lived very peacefully on the bank of the Yamuna incessantly engaged in chanting the Divine Names and singing the glories of Lord Krishna.

Nama Article 12th December 2015


Sri Sri Krishna Premi Swamigal


Vaishnava Samhita

Bhagavadrasika Charitam. Vol II Book V Chp 19 Shloka 24 - 26


तदा नरहरिश्चायमुत्थाय भवसागरात्

लोकवेदभयातीतो बृन्दावनमुपाययौ

सञ्चरन् यमुनातीरे चिन्तयन् श्यामसुन्दरम्

सन्ततं कीर्तयन् कृष्णं चकार सुखजीवनम्

अन्यत्र श्रीवनाद्भक्तः पुनारावर्तते न च

कृष्णमेव सदा ध्यायन्न सस्मार जगत्रयम्


That moment Narahari emerged from the ocean of samsara into which he had fallen. Giving up all moral fears regarding the stipulations of the Veda, and the social code he reached Shri Brindavan. He lived very peacefully on the bank of the Yamuna incessantly engaged in chanting the Divine Names and singing the glories of Lord Krishna. He did not move out of Brindavan to visit any other place. Oblivious of all the three worlds he was engrossed in ceaseless meditation of Shri Krishna


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


Thursday, December 10, 2015

சொல்லித்தான் பாரேன் ஹரி நாமத்தை அது அள்ளித்தரும் அருளை

Nama Article 10th December 2015


Sri Sri Muralidhara Swamiji's Kirtan


ராகம்: ஆபேரி                                     தாளம்: ஆதி


சொல்லித்தான் பாரேன் ஹரி நாமத்தை

அது அள்ளித்தரும் அருளை



பள்ளியில் ஓதி வந்த சிறுவனை

பாகவத அரசனாக முடிசூட்டியது


ஆனைக்கும் அன்று துணையாக வந்தது

மனை தோறும் ஒலிக்க மங்களம் தருவது


வினைகளையெல்லாம் வேரறுக்க வல்லது

நினைத்த மாத்திரத்தில் துணையாக வருவது


ராகம்: கரஹரப்ரியா


நாமம் சொல்லுவோம் வாரீர் - சதா ஹரி

நாமம் சொல்லுவோம் வாரீர்                        

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே


நாமம் சொல்ல சொல்ல பாவம் பறந்திடும்

நாமம் சொல்ல சொல்ல புண்யம் சேர்ந்திடும்  (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல துன்பம் விலகிடும்

நாமம் சொல்ல சொல்ல இன்பம் பெருகிடும்  (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல கவலை கலைந்திடும்

நாமம் சொல்ல சொல்ல அமைதி நிலைத்திடும் (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல வாசனை அழிந்திடும்

நாமம் சொல்ல சொல்ல பிறவிகள் குறைந்திடும் (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல மனது ஒருமுகமாகும்

நாமம் சொல்ல சொல்ல அறிவு கூர்மையாகும்  (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல ஆபத்துகள் அகன்றிடும்

நாமம் சொல்ல சொல்ல விபத்துகள் விலகிடும்  (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல பக்தி விரக்தி வளர்ந்திடும்

நாமம் சொல்ல சொல்ல ஞானம் உதித்திடும்    (ஹரே ..) 


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


Wednesday, December 9, 2015

Remembrance and effort are the two fundamental things necessary for gaining anything. The same holds good in the spiritual field.

Nama Article 9th December 2015


Swami Papa Ramdas

Some aspirants think that the vision of God with form is the end of all Sadhana. Others think that unless and until they see God everywhere, live, move and have their being in God, without any break whatsoever, they have not attained the highest.


You should first know clearly what God-realization is and then how it is to be attained. Experience in the world shows that when you want to gain any object, you have to strive hard and work properly till you get it. As you are striving to achieve your object, your thoughts will be naturally dwelling constantly on what you want to achieve. Thus remembrance and effort are the two fundamental things necessary for gaining anything. The same holds good in the spiritual field. To attain God-realization, constant remembrance of God as well as proper Sadhana is necessary.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


Monday, December 7, 2015

அன்று நீ விபவம், ஆனால் என்றும் உன் நாமம் அபயம். நாமம் சொல்கின்றோம்; இல்லை; நாமம் சொல்லி கதறுகின்றோம். கதியில்லை, மதிகெட்ட எங்களுக்கு ஒரு விதி செய்து அருளினால் எங்கள் மருள் போகும்.

Nama Article 7th December 2015

Source: http://www.namadwaar.org/articles/AnEarnestPrayer.html

Chennai has been submerged in the floods owing to the incessant rains that poured in the last few days. Here is an earnest prayer unto the Almighty, our Protector and Savior...


HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji

அன்று தேவர்கோன் கர்வத்தை அடக்க வேள்வியை நிறுத்தியதால் ஏமாற்றம் அடைந்ததோடு அல்லாமல் தன் நிலை தடுமாறியதால் வெகுளியால் கோகுலத்தை அழித்தான். தட்டு தடுமாறிய கோகுலவாஸிகளும் ஆவினமும் அரணமாய் நின் திருவடியில் தஞ்சம் புகுந்தனர். நொடியும் தாமதியாமல் குன்றெடுத்து கோகுலம் காத்தாய். இன்று யார் கர்வத்தை அடக்க இந்த லீலையை செய்கின்றாய்?

எங்களிடம்தான் கர்வம் தலைதூக்கியுள்ளது என்பதில் எனக்கு ஐயம் இல்லை, நியாயமே ஆகும். என்ன கர்வம் என்று என் வாயால் சொல்லத்தான் வேண்டும். சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் உனக்கில்லை என்ற போதிலும் அறிவால் ஆகாதது இல்லை என்ற புல்லறிவால் இறுமாந்திருந்தேன்; பட்டதுயரத்தால் நல்லறிவு வந்தது.

அன்று நீ விபவம், ஆனால் என்றும் உன் நாமம் அபயம். நாமம் சொல்கின்றோம்; இல்லை; நாமம் சொல்லி கதறுகின்றோம். கதியில்லை, மதிகெட்ட எங்களுக்கு ஒரு விதி செய்து அருளினால் எங்கள் மருள் போகும்.


பார்த்தன் ஜயத்ரதன் விஷயமாக செய்த சபதத்தை நிறைவேற்ற சக்ராயுதத்தால் இருளை விலக்கி ஆதித்யனை காண்பித்தாய். அதுபோல் ஆதித்யனை நிரந்தரமாக ஆகாயத்தில் நிறுத்தி மேகங்களை இப்போது விரட்டிவிடு. தேவையானபோது தானே வரட்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமாம், விருந்தும் கசக்கும், உறவும் பிணக்கி கொள்ளுமாம். தேவையான காலம் அளவோடு பூமியில் தங்கி எங்களுக்கு அருள்பாலிக்கட்டும். நாங்களும் வரவேற்கின்றோம், மகிழ்கின்றோம், உறவாடுகின்றோம், பயனடைவோம்.


அன்று ராமாவதாரத்தில் ராவணனை பார்த்து இன்று போய் நாளை வா என்றாய். இப்போழுது வருணனை பார்த்து, "இன்றே போய் அப்புறமாக வா" என்று ஆணையிடு. வீடு இழந்தார்கள், உடமைகளை இழந்தார்கள், உறவினர்களை இழந்தார்கள், அஞ்சி கதிகலங்கி நிற்கின்றார்கள். எங்கும் அச்சம், ஏன் என்றால் மிச்சம் ஒன்றும் இல்லை.


அபயம் கொடு; ஆறுதல் கொடு; மனதில் உறுதி கொடு; நிதி கொடு; நல்லறிவு கொடு; விதிக்கும் விதி செய்யும் வித்தகனே உன் கழல்கள் போற்றி.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare