Friday, September 11, 2015

ஹரே ராம ஹரே ராம ஹரே ராம என்று பாடிடுவோம் – கரதாளம் போட்டாடிடுவோம்

Nama Article 9th September 2015


HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji's Kirtan


ஹரே ராம ஹரே ராம ஹரே ராம என்று பாடிடுவோம்கரதாளம் போட்டாடிடுவோம்

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண என்று பாடிடுவோம்பரந்தாமன் இவன் என்றாடிடுவோம்


அயோத்தியில் பிறந்து அனைவரும் வணங்கிட தந்தை சொல் கேட்டாரே

மதுரையில் பிறந்து அனைவரும் மயங்கிட குழலூதி நின்றாரே

ஆதிஷேனின் அம்ஸமாம் லக்ஷ்மணன் தம்பியாய் வந்தாரே

ஆதிஷேனின் அம்ஸமாம் பலராமன் அண்ணனாய் வந்தாரே (ஹரே)


தாடகை என்னும் அரக்கியை கொன்று வேள்வியை காத்தாரே

பூதனை என்னும் அரக்கியை கொன்று முக்தியும் தந்தாரே

வசிட்டரிடம் தானே வலிய சென்று கலைகளை கற்றாரே

சாந்தீபனியிடம் குரு தக்ஷிணையாய் இறந்த மகனை தந்தாரே (ஹரே)


பந்தயம் வைத்த சிவ தனுஸை உடைத்து ஸீதையை மணந்தாரே

தொடர்ந்து வந்த ருக்மியை விரட்டி ருக்மிணியை மணந்தாரே

நம் கர்ம வினைகளை தானே ஏற்று கானகம் சென்றாரே

குழம்பி நின்ற பார்தனுக்கன்று கீனதயை சொன்னாரே (ஹரே)


பரதனுக்கன்று பாதுகை தந்து ஆருதல் அளித்தாரே

உத்தவனுக்கன்று பாதுகை தந்து பதரி அனுப்பினாரே

அன்புடன் அன்று சபரி தந்த பழங்களை புசித்தாரே

பாங்குடன் குப்ஜை தந்த சந்தனத்தை பெற்று இளமையை தந்தாரே (ஹரே)


பிரிவால் வருந்திய ஸீதையை காண ஹனுமனை அனுப்பினாரே

பிரிவால் வருந்திய கோபியரை காண உத்தவனை அனுப்பினாரே

கடலின் நடுவில் அனணனய அமைத்து இலங்கையை அடைந்தாரே

கடலின் நடுவில் த்வாரகா நகரத்தை நிர்மாணம் செய்தாரே (ஹரே)


விபீடணன் ஸுக்ரீவனுக்கு முடி சூட்டி அதில் தானும் மகிழ்ந்தாரே

உக்ரசேன தர்மருக்கு முடி சூட்டி அதில் தானும் மகிழ்ந்தாரே

கடைசி வனரயில் தன்னை மனிதன் மனிதன் என்று சொல்லிவந்தாரே

ஆரம்பம் முதலே தன்னை தெய்வம் தெய்வம் என்று பறை சாற்றி கொண்டாரே (ஹரே)


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: